மோசடியைத் தடுத்தல்
டிஜிட்டல் மோசடிகளும் பிஷிங் முயற்சிகளும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் பலியாகாமல் இருப்பது எப்படி என்பதை அறிந்திருப்பது முக்கியம். பிஷிங் மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பதை அனைத்து பயனர்களும் அறிந்திருக்கும்படி நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
பிஷிங் மோசடியின் அறிகுறிகள்
எழுத்துப் பிழைகள்
பல பிஷிங் முயற்சிகளில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருப்பதுண்டு; ஏனெனில் மோசடி செய்பவர்கள் தங்கள் உள்ளடக்கத்தை தொழில்முறை எழுத்தாளர்களிடம் சரிபார்க்கச் செய்வது வழக்கமல்ல.
சந்தேகமான இணைப்புகள் மற்றும் இணைப்புக்கோப்புகள்
பிஷிங் செய்திகள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பறிப்பதற்காக அல்லது தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவுவதற்காக ஆபத்தான இணைப்புகள் மற்றும் இணைப்புக்கோப்புகளை கொண்டிருக்கும். இவ்வகை இணைப்புகள் உண்மையான வலைத்தளங்களின் பெயர்களை தவறாக எழுதியிருக்கலாம் அல்லது சந்தேகத்திற்கிடமான, பாதுகாப்பில்லாத டொமைன்களில் இடம் பெற்றிருக்கும்.
அவசரம்
உங்களை விரைவாகச் செயல்படச் செய்ய ‘அவசரம்’, ‘பயம்’ அல்லது ‘உற்சாகம்’ என்ற உணர்வை உருவாக்குவது ஒரு வழக்கமான மோசடி யுக்தி. நீங்கள் பதறி, யோசிக்காமல் உங்கள் விவரங்களை வழங்கி, ஒரு பரிவர்த்தனையை விரைவில் முடிக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம்.
எளிதில் பணம் கிடைக்கும் எனும் வாக்குறுதிகள்
பிறர்போல் நடிக்கும் சுயவிவரங்கள், நீங்கள் பணம் வென்றதாகக் கூறி, உங்கள் கடவுச்சொல்லையோ வங்கி எண்ணையோ கேட்கலாம். சமூக ஊடகங்கள் வழியாக Deriv உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான விவரங்களை ஒருபோதும் கேட்காது; அதுபோல, நாங்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிகள்/விளம்பர ஊக்குவிப்புகளையும் மேற்கொள்ள மாட்டோம்.
அறியாத அனுப்புநர்கள்
எங்களுடையவற்றைப் போல் தோற்றமளிக்கும் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் சமூக ஊடக சுயவிவரங்களிலிருந்தும் பிஷிங் முயற்சிகள் வரும்; ஆனால் அவற்றின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் காணப்படும். எங்கள் வலைத்தளத்தின் கீழ்ப்பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள சமூக ஊடக சுயவிவரங்களில் வெளியிடப்படும் தகவல்களையே நம்புங்கள்.
நியாயமான வர்த்தக நடைமுறைகள்
இணைப்புகளை உடனே கிளிக் செய்ய வேண்டாம்
கிளிக் செய்வதற்கு முன் இணைப்பை பார்க்க, உங்கள் கர்சரை அந்த URL மீது வைத்துப் பார்க்கவும். இணைப்பு எங்கள் டொமைனுடன் பொருந்தவில்லை அல்லது சந்தேகமாகத் தெரிகிறது எனில், அதைக் கிளிக் செய்ய வேண்டாம்.
கோப்புகளைப் பதிவிறக்க வேண்டாம்
நீங்கள் எதிர்பார்த்திருந்தாலல்லாமல், .exe, .com, .bat, .scr போன்ற நீட்டிப்புகளுடனான இணைப்புக்கோப்புகளைத் திறக்க வேண்டாம். இவ்வகை கோப்புகளில் தீங்கிழைக்கும் மென்பொருள் இருக்கக்கூடும்.
உடனடியாகச் செயல்பட வேண்டாம்
அவசரப்படுத்தப்பட்டாலும், பணம் செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ வேண்டாம். தேவைப்பட்டால், @deriv.com அல்லது info.deriv.com என முடியும் மின்னஞ்சல்களிலிருந்தோ, அல்லது நேரடி அரட்டை மூலம் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்
அனுப்புநரைச் சரிபார்க்காமல் ஒருபோதும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். அனைத்து ரகசிய விடயங்களும் எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவுடன் WhatsApp அல்லது நேரடி அரட்டை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம்
அறியாத அழைப்புகளைத் தடை செய்யவும், சந்தேகமான மின்னஞ்சல்களை அறிவிக்கவும், மேலும் சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான சுயவிவரங்களைப் பார்க்கும்போது எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை தொடர்புகொள்ளவும்.
கேட்கத் தயங்க வேண்டாம்
ஒரு மின்னஞ்சல் அல்லது சமூக ஊடக சுயவிவரத்தைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நேரடி அரட்டை மூலம் எங்களை தொடர்புகொள்ளுங்கள்; அது Deriv சார்ந்ததா என்பதை நாங்கள் உறுதிப்படுத்தி சொல்வோம்.
Deriv இன் பிஷிங் வளங்கள்
பாதுகாப்பான ஆன்லைன் வர்த்தக சமூகத்தை உருவாக்க எங்களின் இடையறாத முயற்சிகளின் ஒரு பகுதியாக, கீழ்க்காணும் இணைப்புகளைப் பார்வையிட்டு மேலும் அறிக:









